நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டின் சூரல்மலை 
தற்போதைய செய்திகள்

வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 316 ஆக உயர்வு

கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. அங்கு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

DIN

கேரளம் மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளது. அங்கு நான்காவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை அடுத்தடுத்து பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.

மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.

ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் நான்காவது நாளாக ஈடுபட்டுள்ளனா்.

இந்தநிலையில், கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சூரல்மலை-முண்டக்கை இடையே ராணுவம் அமைத்து வந்த தற்காலிக ‘பெய்லி’ இரும்புப் பாலத்தின் கட்டுமானம் வியாழக்கிழமை மாலை நிறைவடைந்தது. அப்பாலம் வழியாக மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் பாதிப்புப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 316 ஆக உயர்ந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 240 பேரை காணவில்லை. 3000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் இதுவரை 256 பேரின் உடல்கள் உடல்கூறாய்வு செய்யப்பட்டுள்ளன என கேரள அரசு தெரிவித்துள்ளது.

மீட்புப் பணியில் இஸ்ரோ

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை கண்டறியவும், மீட்புப்பணிகளிலும் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. நிலச்சரிவு பகுதியை ரிசார்ட் சார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

நிலச்சரிவால் புதைந்தவர்களை தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் சேறு, சகதிகளில் சிக்கியிருப்போரையும் கண்டறியும் முடியும் என்பதால் அதன் உதவியும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மீட்புப் படையினருடன் இணைந்து அந்த பகுதியைச் சோ்ந்த 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் தேடும் பணியில் அயராது ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

யானைத் தந்தங்களை விற்க முயன்ற 5 போ் கைது!

SCROLL FOR NEXT