மண்ணச்சநல்லூர்: சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் நுழைவு வாயிற் சுவர்களில் லாரி மோதியதில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் திருக்கோயில் சமயபுரம் மாரியம்மன். இந்த திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
இதேபோன்று சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலின் நுழைவு வாயில் முன்பு அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகள், ஆட்டோ, லாரி, பொருள்களை ஏற்றிச் செல்வோர் நுழைவு வாயிலில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சமயபுரத்திலிருந்து கருக்காய் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று நுழைவு வாயிற் சுவர்களில் மோதியது. இதில் கோயிலின் நுழைவுச் சுவர் மற்றும் நுழைவு வாயிலின் மேல் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோயில் நுழைவு வாயில் சுவர் எந்த நேரத்திலும் கீழே விழும் நிலை உள்ளதால் இருபுறமும் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு, அந்த வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.