ரங்கநாயகி 
தற்போதைய செய்திகள்

கோவை மேயராக ரங்கநாயகி போட்டியின்றி தேர்வு!

ரங்கநாயகியை தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.

DIN

கோவை மாநகராட்சி மேயராக ரங்கநாயகி போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரங்கநாயகியைத் தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில், போட்டியின்றி கோவை மாநகராட்சி மேயராக தேர்வானார்.

கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகள் உள்ளது. இங்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டபோது 96 வார்டுகளில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் கைப்பற்றியது. 3 வார்டுகளை அதிமுகவும், 1 வார்டில் எஸ்டிபிஐ கட்சியும் வெற்றி பெற்றது.

முன்னதாக, கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுகவின் முதல் மேயர் ஆகிய சிறப்புகளுடன் பதவியேற்ற கல்பனா ஆனந்தகுமார், குடும்ப சூழ்நிலை காரணமாக இரண்டே ஆண்டுகளில் உடல் நிலை மற்றும் குடும்ப சூழல் காரணமாக ராஜிநாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தார்.

காலியாக உள்ள கோவை மாநகராட்சி மேயர் பதவியிடத்தை நிரப்ப மறைமுக தேர்தல் நடத்துவதற்காக மாவட்ட ஆட்சியருக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது.

கணபதி பகுதியை சேர்ந்த 29 வது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகி திமுக மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில், கோவை மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவகுரு பிரபாகரனிடம் ரங்கநாயகி தனது வேட்பு மனுவ்வை இன்று தாக்கல் செய்தார்.

மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறவிருந்த நிலையில், ரங்கநாயகி கோவை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீடு மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு: இருவா் கைது

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

முதல்முறையாக 6 - 10-ம் வகுப்களுக்கு உடற்கல்வி பாட நூல் வெளியீடு!

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

SCROLL FOR NEXT