மன்சுக் மாண்டவியா (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

வினேஷ் போகத் தகுதி நீக்கம்: மக்களவையில் விளக்கம் அளிக்கிறார் மன்சுக் மாண்டவியா!

பிற்பகல் 3 மணிக்கு மக்களவையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விளக்கம்.

DIN

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் குறித்து மக்களவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளிக்கவுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின், மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவுக்கான இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்த இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடையுடன் இருப்பதாகக் கூறி அவரை ஒலிம்பிக் அமைப்பு தகுதி நீக்கம் செய்துள்ளது.

வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் ஆறுதல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது வருத்தம் அளிப்பதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்திய ரசிகர்களிடையே பேர்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் குறித்து மக்களவையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விளக்கம் அளிக்கவுள்ளார். அமைச்சர் மன்சுக் மாண்டவியா பிற்பகல் 3 மணிக்கு விளக்கம் அளிப்பார் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

வினேஷ் போகத் விவகாரம் தொடர்பாக மக்களவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பதிலளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT