கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் இன்று(ஆக. 12) இரவு 7 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

DIN

தமிழகத்தில் இன்று(ஆக. 12) இரவு 7 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது இன்று(ஆக. 12) இரவு 7 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2026 தேர்தலில் இபிஎஸ்தான் முதல்வர்: நயினாா் நாகேந்திரன்

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

SCROLL FOR NEXT