தங்கம் விலை அதிரடியாக ரூ. 760 உயர்வு!
சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,520-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக. 13) சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயா்ந்து ரூ. 51,560-க்கு விற்பனையான நிலையில், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.25 உயா்ந்து 6,470-க்கும் , சவரனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 51,760-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ. 52,520-க்கும், கிராமுக்கு ரூ. 95 உயர்ந்து ரூ. 6,565-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ.88.50-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1000 உயர்ந்து ரூ.88,500-க்கும் விற்பனையாகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.