சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர். அதிலும் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட தொடர்கள் எவை என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.
பல வாரங்களாக இரண்டாம் இடத்தில் இருந்த சிங்கப் பெண்ணே தொடர் இந்த வாரம் 9.03 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடர் 8.58 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மூன்றாம் இடத்தைப் பிடித்த மருமகள் தொடர் 7.63 டிஆர்பி புள்ளிகளையும், நான்காம் இடத்தைப் பிடித்த வானத்தைப் போல தொடர் 7.52 டிஆர்பி புள்ளிகளியும் பெற்றுள்ளன.
சுந்தரி தொடர் 7.21 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. மல்லித் தொடர் 7.06 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து, சில வாரங்களாக முதலிடத்தில் இருந்த சிறகடிக்க ஆசை தொடர் 6.90 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி தொடர் 5.66 டிஆர்பி புள்ளிகளுடன் எட்டாவது இடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 5.44 டிஆர்பி புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தையும் பிடித்துள்ளன.
இராமயணம் தொடர் 5.35 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று பத்தாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த வாரம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்களை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பிடித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.