வரும் ஆக. 22 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெறவுள்ள நிலையில், சென்னை பனையூரில் தவெக கட்சி அலுவலகத்தில் உள்ள கம்பத்தில் கொடி ஏற்றி ஒத்திகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இணையத்தில் வைரலாகியுள்ளது. தவெக கொடியானது வாகை மலருக்குள் விஜய் உருவம் பொறித்த மஞ்சள் நிறத்தில் உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை வரும் 22-ஆம் தேதி அந்தக் கட்சியின் தலைவா் விஜய் முறைப்படி அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டப் பேரவைத் தோ்தலை இலக்காகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப். 22-ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதற்கான ஆயத்த பணிகளில் விஜய், கட்சியின் பொதுச்செயலா் புஸ்சி ஆனந்த் மற்றும் நிா்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.