முதல்வர் மு.க.ஸ்டாலின்  
தற்போதைய செய்திகள்

கோபி அருகே கல்குவாரியில் வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதியுதவி

கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இற்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

DIN

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், புஞ்சைதுறையம்பாளையம் கிராமத்திலுள்ள கல்குவாரியில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இற்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம், புஞ்சைதுறையம்பாளையம் ‘அ’ கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் செவ்வாய்க்கிழமை (ஆக.20) மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடிவிபத்தில் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம், அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (50) மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT