ராயன் முதல் கல்கி வரை: இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!
இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
திரையரங்குகளில் வெளியாகும் புதிய திரைப்படங்களை பார்ப்பதற்கென்று ரசிகர்கள் உள்ளதுபோல, ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களைப் பார்ப்பதற்கும் தனி ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த ராயன் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
தெருக்கூத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஜமா திரைப்படம் அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள நகைச்சுவை திரைப்படமான க்ர்ர்(Grrr) திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
ரிஷிகேஷ் நடிப்பில் பாலு சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள உணர்வுகள் தொடர்கதை திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
வினோத் கிஷன், கீர்த்தி பாண்டியன் நடித்த கொஞ்சம் பேசினால் என்ன திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியில் பார்க்கலாம்.
சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' என்ற வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.