தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா 
தற்போதைய செய்திகள்

பாஜகவில் இணைந்த 5 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்!

ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 5 பேர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

PTI

புதுதில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய கவுன்சிலர்கள் 5 பேர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

ஆம் ஆத்மி கட்சியின் தில்லியின் தற்போதைய கவுன்சிலர்களான ராம்சந்திரா (வார்டு 28), பவன் செஹ்ராவத் (வார்டு 30), மம்தா பவன் (வார்டு 177), சுகந்தா பிதுரி (வார்டு 178) மற்றும் மஞ்சு நிர்மல் (வார்டு 180) ஆகியோர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா செய்தியாளர்களுடன் பேசுகையில், ஊழல் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு கூட்டத்தை திரட்டுவது தொடர்பாக தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்ததை அடுத்து ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 5 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக எம்பிக்கள் ராம்வீர் சிங் பிதுரி, யோகேந்திர சந்தோலியா, கட்சியின் மூத்த தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT