அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா. 
தற்போதைய செய்திகள்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மூலம் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்: சிவ கோபால் மிஸ்ரா

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் மூலம் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என சிவ கோபால் மிஸ்ரா தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: மத்திய அரசில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அகில இந்திய ரயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு (ஏஐஆர்எஃப்), இதன் மூலம் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என தெரிவித்துள்ளது.

புது தில்லியில் ​​ஏஐஆர்எஃப் பொதுச் செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:

மத்திய அரசில் 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

இந்த திட்டத்தின் மூலம் 23 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். பணியாளர்களின் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகளை மத்திய அரசில் கவனத்தில் கொண்டுள்ளது என்று மிஸ்ரா கூறினார்.

மத்திய அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்காகவும், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்தார் மிஸ்ரா.

மேலும், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு பணிப் பாதுகாப்பை வழங்கும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT