முகப்பு
தற்போதைய செய்திகள்

துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும்: சீமான்

எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்றெல்லாம் அண்ணாமலை பேசக் கூடாது.

Updated On : 26 ஆகஸ்ட், 2024 at 1:54 PM
சீமான் (கோப்புப்படம்) - எக்ஸ்
பகிர்:

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையாகி உள்ள நிலையில், திமுகவில் மூத்த தலைவர்களுக்கு மரியாதை இல்லை என்று அரசியல் தலைவர்கள் பலரும் விமரிசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக, திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

Advertisement

முதல்வர் வெளிநாடு செல்வதால் அமைச்சர் துரைமுருகனை இடைக்கால முதல்வராக்க வேண்டும். ரஜினிகாந்த் மற்றும் துரைமுருகன் பேசியது நகைச்சுவைக்காகத்தான்.

எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்றெல்லாம் அண்ணாமலை பேசக் கூடாது. தற்போது இருப்பவர்களில் பழனிசாமிதான் புத்திசாலி. தமிழர்களான தமிழிசை செளந்தரராஜன், நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்காமல், தமிழரல்லாத எல். முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவியை பாஜக வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.