முகப்பு
தற்போதைய செய்திகள்

பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர்பிழைத்த 20 பேர்!

இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரி ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்.

Updated On : 27 ஆகஸ்ட், 2024 at 12:52 PM
தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - DIN
பகிர்:

சேலத்தில் தனியார் பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் பேருந்தில் பயனித்த 20 பேர் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்தனர்.

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் அடுத்த தேவாங்கர் காலனி அரூர் சேலம் நெடுஞ்சாலையில், அரூரில் இருந்து சேலம் நோக்கி வந்த பேருந்தும், சேலத்தில் இருந்து அரூர் நோக்கி சென்ற லாரி நேருக்கு நேர் மோதி விபத்துள்ளானது.

இதில் பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.

Advertisement

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள இருளப்பட்டி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் வேடியப்பன் லாரியில் மாட்டிக் கொண்ட நிலையில், இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அதிவேகமாக இயக்கிய பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் தப்பிச் சென்றுள்ள நிலையில், விபத்து குறித்து வீராணம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.