முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவையில் பாஜக பிரமுகர் வெட்டப்பட்டார்! முன்விரோதம் காரணம்?

கோவை ஆர்.எஸ்.புரத்தில் பாஜக இளைஞரணி நிர்வாகி மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்தது பற்றி...

Updated On : 28 ஆகஸ்ட், 2024 at 3:42 AM
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி மர்ம நபர்கள் வெட்டப்பட்ட பாஜக இளைஞரணி நிர்வாகி சதீஷ்குமார்.
பகிர்:

கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞரணி நிர்வாகியை செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயம் அடைந்தவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்டதா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கோவை வடவள்ளி சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (28). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஆர்.எஸ்.புரம் பகுதி பாஜக இளைஞர் அணி செயலாளராகவும் உள்ளார்.

இந்த நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதி பூ மார்க்கெட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்துள்ளார் சதீஷ்குமார். அப்போது அங்கு வந்த ​​நான்கு பேர் கொண்ட கும்பல் அலுவலகத்திற்குள் புகுந்து சதீஷ்குமார் ஆயுதங்களால் வெட்டியுள்ளனர்.

இதில் அவரது கைகளின் இரண்டு மணிக்கட்டுகளிலும் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து படுகாயங்களுன் அவர் மீட்கப்பட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆர்.எஸ்.புரத்தில் மற்றொரு கும்பலுடன் முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமாரை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →