திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சியின் போது அம்பாளுக்கு சாற்றுவதற்கு கொண்டுவரப்பட்ட முத்தங்கி  
தற்போதைய செய்திகள்

திருக்கடையூரில் ஒரு கோடி முறை அபிராமி அந்தாதி பாராயண நிறைவு!

உலக நன்மைக்காக கடந்த 2020 முதல் தொடர்ந்து ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சி திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

உலக நன்மைக்காக கடந்த 2020 முதல் தொடர்ந்து ஒரு கோடி முறை அபிராமி அந்தாதியை பாராயணம் செய்து நிறைவு நிகழ்ச்சி திருக்கடையூர் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவையைச் சேர்ந்த மேனகாதேவி கங்காதரன், சென்னை உமா பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கரோனா காலத்தில் உலக நன்மைக்காக அபிராமி அந்தாதியை ஒரு கோடி முறை பாராயணம் செய்ய முடிவு செய்தனர்.

அம்பாளுக்கு சாற்றப்பட்ட முத்தங்கி

வாட்ஸ் ஆப் குழு மூலம் 1000 பேர் இணைந்தனர். நாள்தோறும் காலை 8.30 மணி முதல் பாராயணம் செய்தனர். கடந்த நான்கரை ஆண்டுகளாக 1 கோடி முறை பாராயணம் செய்தனர்.

அதன் நிறைவு விழா திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதையொட்டி சுவாமி அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. அம்பாளுக்கு முத்தங்கி சாற்றப்பட்டது.

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் அபிராமி கோயிலில் எழுந்தருளியுள்ள அபிராமி தேவி குறித்து அபிராமி பட்டர் இயற்றிய பக்திப் பாடல்களின் தொகுப்பே அபிராமி அந்தாதி. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டதாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' - தமிழகம் முழுவதும் தீர்மானக் கூட்டங்கள் நடத்த உத்தரவு!

எந்த அணியையும் குறைத்து மதிப்பிட மாட்டோம், ஆனால்... இலங்கை அணியின் கேப்டன் கூறுவதென்ன?

பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!

பிரதமர் மோடியுடன் நேபாள இடைக்கால பிரதமர் உரையாடல்!

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

SCROLL FOR NEXT