வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், யூடியூபில் பிரபலமடைவதற்காக, சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேய் வேடமிட்டு பொதுமக்கள் மத்தியில் உலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில், சேலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கருப்பு நிற ஆடையில் வெள்ளை நிறத்தில் எலும்புக்கூடு படம் வரைந்து அணிந்து கொண்டு, பேய் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து, பேருந்துக்கு காத்திருந்தப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றித்திரிந்தார்.
இதை இளைஞர்கள் சிலர் படம் பிடித்தனர். வாழப்பாடியில் மாலை நேரத்தில் திடீரென பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் பேய் வேடத்தில் உலவியதால் பெண்களும், குழந்தைகளும் அலறினர்.
யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து பிரபலமடைவதற்காக பேய் வேடத்தில் மக்கள் மத்தியில் உலவியதாக தெரிவித்த அந்த இளைஞர் மீது, காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
பேய் வேடத்தில் உலவிய இளைஞர் குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.