புதுவையில் 460 மி.மீ மழை பதிவு. படம்: ஏஎன்ஐ
தற்போதைய செய்திகள்

புதுவையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த அதி கனமழை!

புதுவையில் பெய்த அதி கனமழை தொடர்பாக...

DIN

20 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் அதிகபட்சமாக 460 மி.மீ மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் நேற்று இரவு புதுவைக்கு அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரியின் பெரும்பாலான இடங்களில் பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்தது.

இதனால், புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரைச் சாலை, நான்குவழிச் சாலை வழியாக இயக்கப்படும் புதுவை மாநில பேருந்துகளில் மக்கள் அதிகளவில் பயணிக்கவில்லை.

20 ஆண்டுகளுக்கு பிறகு 460 மி.மீ மழை!

புதுவையில் கடந்த 2004 அக்டோபர் 31 ஆம் தேதி அதிகபட்சமாக 210 மி.மீ மழை பதிவான நிலையில், ஃபென்ஜால் புயலால், வரலாறு காணாத வகையில் 460 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும், புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், அலைகள் பல அடி உயரத்துக்கு எழுப்பின. பாண்டி மெரீனாவில் சாலை வரை அலைகள் வந்து சென்றன.

காலாப்பட்டு காவல் நிலையப் பகுதி, கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததையடுத்து, சாலையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டதாரிகளுக்கு உதவித்தொகையுடன் காப்பீடு நிறுவனத்தில் பயிற்சி!

களம்காவல் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா பேட்டிங்.. நிதிஷ் குமார் ரெட்டி சேர்ப்பு!

பொங்கல் விடுமுறை நாள்களில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கம்!

சென்னையிலிருந்து தஞ்சாவூர் சென்ற பேருந்து விபத்து: 10 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT