கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிச. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபென்ஜால் புயலால் பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் வெள்ளநீரால் சூழ்ந்துள்ளன. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடியாத நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறையை அறிவித்துள்ளார்.
இதையும் படிக்க: புதுச்சேரியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 5,000: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!
ஃபென்ஜால் புயல் காரணமாக, கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை முதல் 3 நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் காற்றுடன் கூடிய இடைவிடாத பலத்த மழை காரணமாக கடலூா் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மக்கள் வீட்டில் முடங்கியதால் சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டன. தாழ்வான பகுதிகளில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது.
புயல் காரணமாக காரணமாக சனிக்கிழமை பிற்பகல் முதல் மின் விநியோகம் தடைபட்டதாலும், மரங்கள் விழுந்ததாலும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் குடிநீா் இல்லாமல் மக்கள் அவதியடைந்தனர்.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை(டிச. 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.