முகப்பு
தற்போதைய செய்திகள்

பருவமழை: சென்னைக்கு 9 நாள்கள் ரெஸ்ட்...!

சென்னையில் அடுத்த 9 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்.

Updated On : 3 டிசம்பர், 2024 at 10:53 AM
பருவமழை: சென்னைக்கு 9 நாள்கள் ரெஸ்ட்...!
பகிர்:

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் அடுத்த 9 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வானிலை முன்னறிவிப்புகளை கணித்து வழங்கி வரும் தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வானிலை ஆய்வாளர் ‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.

சமூக ஊடகங்களில் வானிலை தொடர்பாக இவரின் பதிவுகளுக்கு மக்களிடையே எப்போதும் அதிக எதிர்பார்ப்பு இருக்கும்.

இந்த நிலையில், மழை தொடர்பாக சமூக ஊடகங்களில் பிரதீப் ஜான் தெரிவித்ததாவது:

செம்பரம்பாக்கம் 77%, ரெட்ஹில்ஸ் 84%, பூண்டி ஏரி அதிகளவில் நிரம்பியுள்ளது. பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்துள்ளது. ஆந்திரத்தின் அம்மபள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியின் நீர்ப்படிப்புப் பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 9 நாள்களுக்கு வறண்ட வானிலையே நிலவும், சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →