மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு; ஒரு வார காலத்தில் அணை நிரம்ப வாய்ப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருதால் ஒருவார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருதால் ஒருவார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் காவிரியின் துணை நதிகளான பாலாறு சின்னாறு தொப்பையாறு நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்ந்து மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 9,246 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து செவ்வாய்க்கிழமை இரவு வினாடிக்கு 29,021 கன அடியாக அதிகரித்தது. புதன்கிழமை காலை நீர்வரத்து வினாடிக்கு 32,240 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: ஆற்றோடுபோன ரூ.16 கோடி புதுப் பாலம்! திறந்து 3 மாதங்கள்தான்!
Advertisement
Advertisement
நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் அணையிலிருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 111.39 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 113.21 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.72 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 1000 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணை நீர் இருப்பு 83.05 டிஎம்சியாக உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஒருவார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.