தற்போதைய செய்திகள்

2வது டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபாரம்

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

DIN

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 180 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழக்க, ஆஸ்திரேலியா அணி ட்ராவிஸ் ஹெட்டின் அபார சதத்தால் 337 ரன்கள் குவித்தது. இதனால் முதல் இன்னிங்ஸிலேயே ஆஸ்திரேலியா 157 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

100-வது முறை... டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் புதிய சாதனை!

ஆனால் அடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 இன்னிங்ஸிலும் தடுமாறியது. 2வது நாள்(சனிக்கிழமை) ஆட்டம் நேரம் முடிவிலேயே 128 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தனர். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 19 ரன்கள் மட்டும் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா அணி 3.2 ஓவர்களில் எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT