பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறுகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 
தற்போதைய செய்திகள்

அதிமுக ஆட்சியில்தான் மின்சார கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டது: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சார கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.

DIN

மின்சார கொள்முதலில் அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை நாங்கள் போட்டது போல மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு.

கரூர்: அதிமுக ஆட்சியில் போடப்பட்ட மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தை திமுக ஆட்சியில் போட்டது போல மாயத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்கள் என்றார் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி

கரூர் மாநகராட்சிக்குள்பட்ட கரூர் மேற்கு மற்றும் தெற்கு பகுதி மற்றும் அனைத்து வார்டுகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வருகை தந்து கோடங்கிப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பின்னர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், கரூர் மாவட்டத்திற்கு புதிய வேளாண் கல்லூரி மற்றும் ரூ. 3000 கோடியில் பல்வேறு திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளார்.

இதேபோன்று, 200 ஏக்கரில் சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ளது. கோடங்கிபட்டி உயர்மட்ட பாலம் விரைவில் வர உள்ளது. மின்சாரம் கொள்முதல் விசாரணை தொடர்பாக ஏற்கனவே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளோம். ஆனால் அந்த அறிக்கையை படித்த பின்னும் அதை புரிந்து கொள்ளாமல் ஒருவர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அவர் பலமுறை அந்த அறிக்கையை படித்தும் அவருக்கு புரியவில்லை. தெரிஞ்சவங்க கிட்ட கேட்டும் புரிந்து கொள்ளும் பக்குவமும் அவருக்கு இல்லை. அந்த அளவுக்கு அறிவுத்திறனும் இல்லை. நான் ஒன்னு மட்டும் கேட்டுக்கொள்கிறேன். அவரது அறிக்கையின் வரிகளில் ஜாமீன் அமைச்சர் என சொல்லி இருக்கிறார். பாஜகவில் எத்தனை பேர் ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். எத்தனை பேர் அமைச்சராக இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லக்கூடிய குற்றச்சாட்டு என்பது மின்சார கொள்முதலில் 7 ரூபாய் ஒரு காசு என்பது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிதி விடுவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தடையாணை கேட்டோம்.

ஆனால் உச்ச நீதிமன்றம் தடையாணை வழங்கவில்லை. அதனால் அந்த நிதி விடுவிக்கப்பட்டது. ஏதோ நாங்கள் ஒப்பந்தம் போட்டது போல ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள். அந்த முயற்சி ஒருபோதும் எடுபடாது. இந்த மூன்று ஆண்டுகளில் அதானி குடும்பத்தோடு எந்த தொடர்பும் தொழில் ரீதியாக எந்த தொடர்பும் வைக்கவில்லை என தெளிவாகக் கூறி வருகிறோம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

SCROLL FOR NEXT