தற்போதைய செய்திகள்

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 12-வது சுற்றில் குகேஷ் தோல்வி!

செஸ் தொடரில் டிங் லிரென், குகேஷ் இருவரும் 6 - 6 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

DIN

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 12வது சுற்றில் தமிழக வீரர் டி. குகேஷ் தோல்வி அடைந்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற 12வது சுற்றின் முடிவில், டிங் லிரென் உடன் மோதிய குகேஷ் தோல்வியைத் தழுவினார். வெள்ளை நிறக் காய்களுடன் போட்டியைத் தொடங்கிய டிங் லிரென் தனது 38-வது நகர்த்தலில் வெற்றிப் பெற்றார்.

14 சுற்றுகள் கொண்ட உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 12 சுற்றுகள் முடிவில் டிங் லிரென் மற்றும் குகேஷ் இருவரும் 6-6 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்தத் தொடரில், 10வது சுற்று சமனில் முடிந்தது. நேற்று நடைபெற்ற 11வது சுற்றுப் போட்டியில் குகேஷ் வெற்றி பெற்றார்.

இதனால் 6 - 5 என்ற கணக்கில் குகேஷ் முன்னிலை பெற்றிருந்தார். எஞ்சியுள்ள போட்டிகளை சமன் செய்தாலே குகேஷ் வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது.

இதனிடையே வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் லிரென் இன்று களமிறங்கினார்.

இன்று நடைபெற்ற 12வது சுற்றுப் போட்டியில் தொடக்கம் முதலே லிரென் ஆதிக்கம் செலுத்தி வந்தார். 7 நிமிடங்களில் 15 நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில் குகேஷ் இருந்தார்.

இந்நிலையில், 38வது நகர்த்தலில் டிங் லிரென் வெற்றி பெற்றார். இதனால் 14 சுற்றுகள் கொண்ட இத்தொடரில் லிரென் 6 புள்ளிகளையும், குகேஷ் 6 புள்ளிகளையும் பெற்று சமநிலையில் உள்ளனர்.

போட்டிக்கு பிறகு குகேஷ் பேசியதாவது, ''ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இது நேர்மறையான முடிவாகவேத் தெரிகிறது. நேற்று முன்னிலை பெற்றிருந்ததால், இன்றைய தோல்வி சற்று ஏமாற்றமளிக்கிறது. அடுத்த இரு சுற்றுகளில் நல்ல விளையாட்டை வெளிப்படுத்துவதற்காக மனநிலையை தயார் செய்ய வேண்டும்'' எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | நேரத்தை வீணாக்காமல் பயிற்சியை தொடங்குங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT