கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது!

தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய 2 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டிருப்பதைப் பற்றி..

DIN

தில்லி: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் குடியேறிய 2 வங்கதேசத்தினரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், 1000க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அம்மாநில ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து, வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் பணியை தில்லி நகர காவல்துறையினர் கடந்த புதன்கிழமை (டிச.11) துவங்கினர்.

இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 2 பேர் கைது செய்யப்பட்டதுடன், 1000க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க: முதியோர் இல்லத்தில் தீ விபத்து! 6 பேர் பலி!

இதுகுறித்து தில்லி மாநில காவல்துறை உயர்அதிகாரி ரவிக்குமார் சிங் கூறுகையில், நடத்தப்பட்டுவரும் சோதனைகளில் கைது செய்யப்பட்ட இருவரும் கலிண்டி குண்ஜ் மற்றும் ஹஸ்ரத் நிஜாமுதீன் பகுதி ஆகிய இடங்களில் பதுங்கியிருந்ததாகவும்,அதில் ஒருவர் வங்கதேசத்தில் ஒரு தரகரிடம் ரூ.25,000 கொடுத்து டிச.6 ஆம் தேதி இந்தியாவுக்குள் நுழைந்து இங்கு வேலை தேடி வந்ததாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரிடமும் பல்வேறு இந்தியப் பாதுகாப்பு நிறுவனங்கள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பிற்கு பின்னர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்நாட்டினர், வேறு வழியின்றி பிழைப்புத் தேடி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வலியோடு முறியும் மின்னல்... கீர்த்தி ஷெட்டி!

கூலி படத்தில் கொலை செய்யப்படுவேனா? ஷ்ருதி ஹாசன் விளக்கம்!

ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி

சீனாவில் கனமழையால் நிலச்சரிவு! 7 பேர் மாயம்..மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT