மழை காரணமாக தாமரைக்குளம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் பலியான பெண் சின்னக்குழந்தை.  உள்படம்
தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி!

காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார்.

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெள்ளிக்கிழமை பலியானார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அருகே தாமரைக்குளம் கிராமத்தில் வசித்து வந்த பெண் சின்னக்குழந்தை(65). இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக வீட்டின் சுவர் ஈரப்பதத்துடன் இருந்ததால் திடீரென இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் சின்னக்குழந்தை சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT