சவுக்கு சங்கர் (கோப்பிலிருந்து...) Din
தற்போதைய செய்திகள்

சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல்!

சவுக்கு சங்கருக்கு விடுக்கப்பட்ட நீதிமன்றக் காவல் தொடர்பாக...

DIN

தேனி கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை கோவை போலீஸாா், தேனியில் கைது செய்தனா். அப்போது, அவா் தங்கியிருந்த அறையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக, தேனி மாவட்டம், பழனி செட்டிப்பட்டி போலீஸாா் சவுக்கு சங்கா் மீது கஞ்சா பதுக்கல் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக இந்த வழக்கு விசாரணைக்கு சவுக்கு சங்கா் சரிவர முன்னிலையாகவில்லை எனக் கூறப்படுகிறது.

அவா் மீதான வழக்கு நீதிபதி செங்கமலச்செல்வன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, சவுக்கு சங்கா் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவா் சாா்பில் வழக்குரைஞா் முன்னிலையாகி மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை நிராகரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், குற்றஞ்சாட்டப்பட்ட சவுக்கு சங்கருக்கு எதிராக பிடிஆணை பிறப்பித்தாா்.

இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீஸாா் சவுக்கு சங்கரை செவ்வாய்க்கிழமை பிற்பகல் கைது செய்தனா்.

அவரை, பழனி செட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் சென்னையிலிருந்து மதுரைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இந்த நிலையில், தேனி கஞ்சா வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத சவுக்கு சங்கருக்கு 2 நாள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT