சிடி ரவி (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

பெண் அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: சிடி ரவிக்கு ஜாமீன்

பாஜக எம்எல்சி சி.டி.ரவிக்கு இடைக்கால ஜாமீன்.

DIN

அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரை தகாத வாா்த்தையால் விமா்சனம் செய்ததாக அளித்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்சி சி.டி. ரவிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது.

அம்பேத்கா் பெயரை கூறுவது குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த கருத்து தொடா்பாக பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதா சட்ட மேலவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களிடையே வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது.

அப்போது, லட்சுமி ஹெப்பாள்கா் குறித்து சி.டி.ரவி தகாத வாா்த்தை கூறியதாக தெரிகிறது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ஒத்திவைத்தாா்.

சட்ட மேலவைக்கு திரும்பிக்கொண்டிருந்த சி.டி.ரவியை, லட்சுமி ஹெப்பாள்கரின் ஆதரவாளா்கள் தாக்க முயற்சித்துள்ளனா். அவா்களிடம் இருந்து சி.டி.ரவியை காவலா்கள் காப்பாற்றினர்.

இதனிடையே, அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் அளித்த புகாரின்பேரில், சட்டப் பேரவை வளாகத்தில் இருந்த பாஜக எம்எல்சி சி.டி.ரவியை போலீஸாா் கைது செய்தனா்.

இதனைத் தொடர்ந்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி பாஜக எம்எல்சி சி.டி.ரவி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீனை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சிடி ரவி கூறுகையில், "எங்கள் பாதுகாவலர் அவரது முடிவை தெளிவாக சொன்னபோதும், அதே ஏற்காமல் என் மீது பொய் வழக்கு போடப்பட்டு, தீவிரவாதியைப் போல நடத்தினார்கள்.

அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவர்களே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நேற்று இரவு மற்றும் காலையில் சாப்பிடாததால், எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இது உண்மைக்கு கிடைத்த வெற்றி, அனைவரும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற உத்தரவு நமக்கு தெளிவுபடுத்துகிறது" என்றார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெய்வ தரிசனம்... எமபயம் போக்கும் திருகோடிக்கா திருகோடீஸ்வரர்!

டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாதது ஏன்?

ஜி.எஸ்.டி. தடாலடி குறைப்பு? புதிய தகவல்கள்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT