முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் மருத்துவக் கழிவுகள் கொட்டிய லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On : 21 டிசம்பர், 2024 at 7:51 AM
மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு சுத்தமல்லி காவல்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரி.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் லாரி பறிமுதல் செய்யப்பட்டு லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியை அடுத்த கல்லூா், பழவூா் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் கேரள மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள அரசு அதிகாரிகள் 8 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த நிலையில், மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டு வர உதவியதாக சேலத்தை சேர்ந்த லாரியை பறிமுதல் போலீசார், லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் லாரியை பறிமுதல் செய்ததாக தெரிவித்த காவல்துறையினர், லாரி உரிமையாளரிடம் நடத்திய விசாரணையை அடுத்து தனிப்படை போலீசார் கேரளம் விரைந்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →