கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி வகுப்பறையில் எழாம் வகுப்பு மாணவியை விஷப்பாம்பு கடித்ததைத் தொடர்ந்து அரசு விசாரணையைத் துவங்க உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்திலுள்ள நெய்யத்தின்கரா எனும் ஊரிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் நேற்று கிருஸ்துமஸ் தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது.
அப்போது ஏழாம் வகுப்பு மாணவியான நேஹா எனும் சிறுமியை வகுப்பறைக்குள் புகுந்த விஷப்பாம்பு ஒன்று கடித்தது.
இதையும் படிக்க: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு சிறை!
இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த மாணவி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதில் மாணவியின் உயிர் காப்பாற்றப்பட்டு, தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்பிக்குமாறு பொதுக் கல்வித்துறை இயக்குநருக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.