கார் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பொதுமக்கள் வைத்திருக்கும் மலர்கள்.  
தற்போதைய செய்திகள்

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயம்!

ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தை கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயமடைதுள்ளதைப் பற்றி..

DIN

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் மருத்துவர் ஒருவர் நடத்திய கார் தாக்குதலில் 7 இந்தியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணத்தின் மாக்டபா் நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமைக்கப்பட்டிருந்த சிறப்பு சந்தையில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 50 வயது மருத்துவர் ஒருவர், வேகமாக காரை ஒட்டி வந்து அங்கிருந்தவர்களின் மீது மோதச் செய்தார்.

இதில், ஒரு குழந்தை உள்பட 5 பேர் பலியானதுடன், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேர் இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிகிச்சைப் பெற்று வந்த 7 இந்தியர்களில் தற்போது 4 பேர் நலமாகி வீடுத்திரும்பியுள்ள நிலையில் இன்னும் 3 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஜெர்மனியிலுள்ள இந்தியத் தூதரகம் படுகாயம் அடைந்த இந்தியர்களுக்கான அனைத்து சேவைகளையும் மேற்கொண்டு அவர்களது உடல் நிலைகுறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதலில் எத்தனை இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் முழுவதுமாக வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!

கலைமாமணி புகைப்படங்களைப் பதிவிட்டதில் தாமதம் ஏன்? சாய் பல்லவி விளக்கம்!

மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் இருக்கின்றன: மல்லை சத்யா

கரூர் வெண்ணைமலை கோயில் முன் அனைத்துக் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

கரூர் பலி: மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை!

SCROLL FOR NEXT