கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதமாக குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டதைப் பற்றி..

DIN

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் சட்டவிரோதமாக குடியேறிய 1 பெண் உள்ளிட்ட 8 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர்.

அம்மாநில காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பின்வாடி நகரத்தின் கல்ஹர் மற்றும் கோங்கவும் எனும் இடங்களில் நேற்று (டிச.22) மற்றும் அதற்கு முந்தைய நாள் (டிச.21) ஆகிய இரு நாள்களும் போலீஸார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அங்கு எந்தவொரு அடையாள ஆவணங்களும் இல்லாமல் தங்கியிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 8 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் குடியேறிய 8 வங்கதேசத்தினரும் தொழிலாளிகளாக வேலைச் செய்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் 22 முதல் 42 வயதிற்குள்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களின் மீது வெளிநாட்டு குடிமக்கள் சட்டம் மற்றும் இந்திய பாஸ்போர்ட் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அந்நாட்டினர் பலர் பிழைப்புத் தேடி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக குடியேறி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளி, குடியிருப்புப் பகுதியில் திரியும் குரங்குகளை அப்புறப்படுத்தக் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்

விராலிமலையில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடக்கம்

நவ.17-இல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவா் பணிக்கான நோ்காணல்

சந்திரமெளலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT