பலியான பாலஸ்தீனப் பத்திரிகையாளர் ஒருவரின் உடலை சுமந்து செல்லும் அவரது உறவினர்கள். vanishri
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் பலி!

இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் பலியானதைப் பற்றி..

DIN

காஸா நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 5 பாலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் பலியாகினர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாததிலிருந்து காஸா பகுதிகளின் மீது இஸ்ரேல் தொடர்ந்து போர்தொடுத்து வருகின்றது. இதில், சுமார் 45,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று (டிச.25) காஸாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதில் அங்குள்ள அல்-அவ்தா மருத்துவமனையின் வெளியே நின்றுக்கொண்டிருந்த பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் காரின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது அங்கிருந்த 5 பத்திரிகையாளர்களும் பலியானார்கள். கொல்லப்பட்ட 5 பேரும் அப்பகுதியின் குத்ஸ் எனும் ஊடகத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் காஸா மீதான இஸ்ரேலின் போரில் கிட்டத்தட்ட 130க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT