அண்ணா பல்கலை. (கோப்புப்படம்) Din
தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. போராட்டம்: போக்குவரத்து மாற்றம்!

கிண்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

DIN

சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக கிண்டி சாலையில் இன்று(டிச. 26) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடா்பாக போலீஸாா், தொடா்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். அதேவேளையில் இனி வரும் காலங்களில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்கலைக்கழக வளாக பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக நிா்வாகத்தை பெருநகர காவல் துறை அறிவுறுத்தியது.

இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளா் பிரகாஷ் தெரிவித்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக பிரதான வாயில் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருவதால் கிண்டி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், "அண்ணா பல்கலைக்கழக தலைமை வாயில் முன்பு நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக லிட்டில் மவுண்டில் வாகனங்கள் சைதாப்பேட்டை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது. அதற்கேற்ப உங்கள் வழிகளைத் திட்டமிடவும்!" என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT