தி. அரப்பா (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

பத்திரிகையாளர் தி. அரப்பா காலமானார்!

பத்திரிகையாளர் தி. அரப்பா தனியார் மருத்துவமனையில் காலமானார்.

DIN

சிவகங்கை: மதுரை மாவட்ட பத்திரிகையாளர் சங்க முன்னாள் நிர்வாகியும், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பேரவையை தொடங்கி நடத்தி வந்தவருமான தி. அரப்பா(65) வியாழக்கிழமை மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

பெரியாரால் தனது வலது கரம் எனக்கூறப்பட்ட சிவகங்கை வழக்குரைஞரும் சுயமரியாதை வீரருமான எஸ். ராமச்சந்திரனாரின் மகன் வழிப்பேரனான இவர், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். தமிழ் மீது தீராத பற்றுக்கொண்டவர். சமுதாய மக்களுக்காக உறவுக்குரல் என்ற பத்திரிகையை தன் வாழ்நாள் இறுதிவரை நடத்தி வந்தார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களிடம் இணக்கமாக இருந்து பல போராட்டங்களில் ஈடுபட்டவர். மதுரையில் செய்தியாளர் சங்கத்தில் நிர்வாகியாக இருந்து, அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியை அணுகி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வீட்டு மனை கிடைக்க முயற்சி எடுத்தவர்.

சிறுநீரக பாதிப்பு காரணமாக கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை(26.12.2024) காலை சுமார் 8 மணியளவில் காலமானார்.

இவரது, இறுதிச் சடங்கு சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள சொந்த ஊரான ஆ.தெக்கூர் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் (டிச. 27) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 9943932034.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

SCROLL FOR NEXT