கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்தினால் 8 பேர் பலியானார்கள். PTI
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து கவிழ்ந்த பேருந்து! 8 பேர் பலி!

பஞ்சாப் மாநிலத்தில் பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலியானதைப் பற்றி..

DIN

பஞ்சாப் மாநிலம் பட்டிண்டா மாவட்டத்தில் பாலத்தின் மீது சென்றுக்கொண்டிருந்த பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.

பட்டிண்டா மாவட்டத்திலிருந்து டல்வாண்டி சாபோ எனும் ஊரை நோக்கி இன்று (டிச.27) 45 பயணிகளுடன் ஒரு தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது, ஜீவன்சிங்வாலா எனும் கிரமத்திலுள்ள ஒரு பாலத்தின் மீது வந்துக்கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, கீழே சென்றுக்கொண்டிருக்கும் லசாரா கால்வாய்க்குள் கவிழ்ந்தது.

இதையும் படிக்க: 2 கிராமங்களின் மீது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்!

இதில், 8 பேர் பலியானார்கள். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விபத்து நடந்த இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கால்வாய்க்குள் கவிழ்ந்த பேருந்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்க தேசியப் பேரிடர் மீட்புக் குழு ஒன்று சம்பவிடத்திற்கு வரவழைக்கப்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலை அதற்கான காரணமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: தமிழகத்தில் காவல்துறை உள்ளதா? -இபிஎஸ் கண்டனம்

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரி மனு! உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சக்கர நாற்காலியில் வந்து வெற்றியைக் கொண்டாடிய பிரதிகா!

கூல்... மகிமா நம்பியார்!

தெருநாய்கள் விவகாரம்: நவ 7-ல் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT