மீட்கப்பட்டு ஜார்க்கண்ட் அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் 
தற்போதைய செய்திகள்

ஆப்பிரிக்க நாட்டில் சிக்கித் தவித்த 47 இந்தியர்களில் 11 பேர் மீட்பு!

ஆப்பிரிக்க நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களில் 11 பேர் மீட்கப்பட்டதைப் பற்றி...

DIN

மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கேமரூன் நாட்டில் சிக்கித்தவித்த 47 இந்தியத் தொழிலாளர்களில் 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 47 தொழிலாளர்களும் ஆப்பிரிக்க நாடான கேமரூனுக்கு மும்பையை சேர்ந்த நிறுவனத்தின் மூலமாக வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாநில புலம்பெயர்வோர் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தொழிலாளர்களுக்கு தொடர்புக்கொண்ட பொழுது அவர்கள் கடந்த 3 மாதக்காலமாக அவர்களுக்கு எந்தவொரு ஊதியமும் இல்லாமல் வேலைச் செய்ய வற்புறுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

பின்னர் முறையாக 47 பேரையும் மாநிலங்களுக்கு இடையே புலம் பெயரும் தொழிலாளர்கள் என்று பதிவுச் செய்யாமல் கேமரூனுக்கு அனுப்பிய அந்த நிறுவனம் மற்றும் தர்கர்களின் மீது டிசம்பர் மாதத் துவக்கத்தில் ஜார்க்கண்ட் மாநில அரசு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரேனின் உத்தரவின்படி கேமரூன் நாட்டில் சிக்கித் தவிக்கும் 47 தொழிலாளர்களில் 11 பேர் மீட்கப்பட்டு இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும், 36 தொழிலாளர்களை அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பழங்குடியினப் பெண்களை மரத்தில் கட்டிவைத்து அடித்தவர்கள் மீது வழக்குப்பதிவு!

இதுகுறித்து நேற்று (டிச.29) ஜார்க்கண்ட் முதல்வர் செயலாளார் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கேமரூன் நாட்டில் சிக்கித்தவித்த 47 தொழிலாளர்களில் 11 பேர் பத்திரமாக அழைத்து வரப்பட்டு, தொழிலாளர் துறை அவர்களை பத்திரமாக அவர்களது வீட்களுக்கு அனுப்பியுள்ளதாகவும்.

மேலும், அங்கு சிக்கித் தவிக்கும் 36 பேரையும் மீட்டு இந்தியா அழைத்து வர வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியோடு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அந்த தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய ரூ.39.77 லட்சம் ஊதியம் அவர்களுக்கு கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT