முகப்பு
தற்போதைய செய்திகள்

ஓடிடியில் ஜாலியோ ஜிம்கானா!

ஜாலியோ ஜிம்கானா திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

Updated On : 30 டிசம்பர், 2024 at 7:06 AM
பகிர்:

பிரபு தேவா நடிப்பில் வெளியான ஜாலியோ ஜிம்கானா படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் இன்று(டிச. 30) வெளியாகியுள்ளது.

இயக்குநர் சக்தி சிதம்பரம் ஜாலியோ ஜிம்கானா படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பிரபு தேவா உடன் நாயகியாக நடிகை மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஜாலியோ ஜிம்கானா படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்க, விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார்.

ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமான ஜாலியோ ஜிம்கானா திரைப்படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →