DOTCOM
தற்போதைய செய்திகள்

100 உழவர் அங்காடிகள் அமைக்க ரூ. 5 கோடி!

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்த ரூ. 5 கோடி ஒதுக்கீடு.

DIN

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள் செயல்படுத்த ரூ. 5 கோடி வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார்.

அப்போது, “உழவர்சந்தைகளில் விற்பனை செய்வதைப் போன்று தரமான வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் எளிதில் நகர்ப்புர நுகர்வோரைச் சென்றடைய, நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளின்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள், 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்.” என்று அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருள்நிதியின் ராம்போ டிரைலர்!

உக்ரைனில் ரயில் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்

கரூர் பலி! விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி - சீமான்

பியூட்டி இன் ரிஷிகேஷ்... ஆத்மிகா!

ஃபரூக் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT