தற்போதைய செய்திகள்

யோகி பாபு - வாணி போஜனின் 'சட்னி சாம்பார்' வெப் தொடர்!

நடிகர் யோகி பாபு மற்றும் வானி போஜன் நடிக்கும் புதிய வெப் தொடரின் டீசர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் யோகி பாபு மற்றும் வானி போஜன் நடிக்கும் புதிய வெப் தொடர் 'சட்னி சாம்பார்'. இந்த வெப் தொடரின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

பல திரைப்படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்துவரும் நடிகர் யோகி பாபு, இயக்குநர் ராதா மோகன் இயக்கும் புதிய வெப் தொடரில் நடிக்கிறார். இந்த வெப் தொடருக்கு 'சட்னி சாம்பார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதில் வாணி போஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், தீபா சங்கர், காயத்ரி ஷான், நிழல்கள் ரவி, ஆர். சுந்தர்ராஜன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்த தொடர் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைத் தொடராக எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு உணவகங்களுக்கு இடையே நடக்கும் போட்டியே இந்த தொடரின் மையக்கரு.

'சட்னி சாம்பார்' வெப் தொடரின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இத்தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்! மீட்புப் பணியின்போது மீண்டும் தாக்குதல்!

ஆக. 28 ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி: ஜப்பான் பிரதமர் இஷிபாவுடன் முதல்முறையாக இருதரப்பு பேச்சு!

வெவ்வேறு நட்சத்திரங்களில் நின்ற "சனி" தரும் பலன்கள் என்னென்ன?

இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜாமீன்!

கவின் கொலை வழக்கு: நீதிமன்றக் காவல் 15 நாட்கள் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT