எல்.கே. அத்வானி (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்!

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி அப்போலோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

DIN

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று(ஜூலை 4) வீடு திரும்பினார்.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எல்.கே. அத்வானி(96), கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில், அவர் அப்போலோ தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

அத்வானியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மூத்த நரம்பியல் மருத்துவா் வினித் சூரியின் மருத்துவக் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

உரிய சிகிச்சைகள் அத்வானிக்கு அளிக்கப்பட்ட பிறகு, அவரது உடல்நிலை சீரான நிலையில், இன்று(ஜூலை 4) மாலை 5 மணிக்கு அப்போலோ மருவத்துவனையில் இருந்து வீடு திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT