கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பித்ரகுண்டா விரைவு ரயில் ஜூலை 29 முதல் ரத்து

சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா இடையே இயங்கும் விரைவு ரயில் ஜூலை 29 முதல் ஆக.30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

DIN

சென்னை: சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா இடையே இயங்கும் விரைவு ரயில் ஜூலை 29 முதல் ஆக.30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு

சென்னை சென்ட்ரலிருந்து வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் பித்ரகுண்டா விரைவு ரயிலும் (எண்: 17238), மறுமாா்க்கமாக பித்ரகுண்டாவிலிருந்து அதிகாலை 4.55 மணிக்கு சென்ட்ரல் வரும் ரயிலும் (எண்: 17237) ஜூலை 29 முதல் ஆக.30-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பாதை மாற்றம்: இதற்கிடையே, ஜாா்கண்ட் மாநிலம் ஜசிதி - தாம்பரம் அதிவிரைவு ரயில் (எண்: 12376) ஜூலை 31 முதல் ஆக.28-ஆம் தேதி வரையும், எா்ணாகுளம் - பாட்னா வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (எண்: 22643) ஜூலை 29 முதல் ஆக.26-வரையும், பெங்களூரு - கௌகாத்தி அதிவிரைவு ரயில் (எண்: 12509) ஜூலை 31 முதல் ஆக.30 வரையும் நிடதவோலு, பீமவரம் டவுன், குடிவாடா மற்றும் விஜயவாடா வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT