சிதம்பரம் நடராஜர் கோயிலில் புதன்கிழமை காலை கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 
தற்போதைய செய்திகள்

நீதிமன்ற உத்தரவை அடுத்து நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று புதன்கிழமை காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

DIN

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது நின்று புதன்கிழமை காலை பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 11-ஆம் தேதி தேர் திருவிழாவும், ஜூலை 12-ஆம் தேதி அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெறுகிறது. மேற்கண்ட இரண்டு நாள்கள் உற்சவத்திற்கு மூலவரான நடராஜப் பெருமானும், சிவகாமசுந்தரி அம்பாளும் சித்சபையிலிருந்து வெளியே வருவதால் பூஜை முன்னேற்பாடுகளை கருதி கனகசபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய ஜூலை 10,11,12,13 ஆகிய தேதிகளில் அனுமதியில்லை என பொதுதீட்சிதர்களால் நடத்தப்பட்டு வரும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், ஆனி திருமஞ்சன உற்சவத்தின் போது கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தமூர்த்தி ராமநாதன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) அரங்க மகாதேவன், நீதிபதி முகமதுசவுக் விசாரித்தனர்.

விசாரணையில் போது இந்து அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கையில் கனகசபை மீது நின்று தாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசாணைக்கு தடை ஏதும் விதிக்கவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் தெரிவிக்கையில் கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசானைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கலாம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து தேரோட்டத்திற்கு முதல் நாளான ஜூலை 10-ஆம் தேதி புதன்கிழமை காலை பக்தர்கள் கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய பொதுதீட்சிதர்களால் அனுமதி வழங்கப்பட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தஞ்சாவூா் பெரிய கோயிலில் சதய விழா கோலாகலமாக தொடங்கியது!

அமெரிக்காவின் கனவை எங்களுக்கு ஏன் விற்றீர்கள்? - இந்திய மாணவியின் கேள்வியும் ஜே.டி. வான்ஸின் பதிலும்!

இது முதல்வர் பதவிக்கே அவமானம்! - மு.க. ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

பள்ளி மாணவர்கள் வந்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஒரு பெண் பலி, 11 பேர் காயம்!

13 நாள்களுக்குப் பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி!

SCROLL FOR NEXT