ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி திருவேங்கடம் மீதான என்கவுண்டரில் சந்தேகம் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி காட்பாடியில் தொழிலதிபர் சேகர் ரெட்டி அவர்களின் தந்தையாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “பணபலம், அதிகார பலத்தினால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர்.
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும்.
ஆனால், கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, தமிழகத்தில் உள்ள விவசாயிகளின் நலன் கருதி, கர்நாடகத்தில் உள்ள காங்கிரஸ் அரசை எதிர்த்து குரல் கொடுக்கவில்லை.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளியான திருவேங்கடம் என்பவர் சரணடைந்துள்ளார்.
சரண் அடைந்தவர் என்கவுண்டரில் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். எதற்காக அவர் அவசரமாக என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார். இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஒரு என்கவுண்டர் நடந்திருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.