டேவிட் வார்னர் (கோப்புப் படம்) படம் | ஐசிசி
தற்போதைய செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபியில் வார்னர் இடம்பெறமாட்டார்: ஆஸி. தேர்வுக்குழு தலைவர்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

DIN

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெற்றார். சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வு பெற்ற போதிலும், சாம்பியன்ஸ் டிராபியில் அணியில் இடம்பெற்றால் விளையாடுவதற்குத் தயாராக இருப்பதாக அண்மையில் விருப்பம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் இடம்பெறமாட்டார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டேவிட் வார்னர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பது எங்களுடைய புரிதல். ஆஸ்திரேலிய அணிக்காக அனைத்து வடிவிலான போட்டிகளிலும் அவர் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலிய அணியில் வார்னர் கண்டிப்பாக இடம்பெற மாட்டார் என்றார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT