எம்.ஆர். விஜயபாஸ்கர், பிருதிவிராஜ். 
தற்போதைய செய்திகள்

எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கு: காவல் ஆய்வாளர் பிருதிவிராஜுக்கு நீதிமன்றக் காவல்!

எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.

DIN

எம்.ஆர். விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது.

நில மோசடி வழக்கில் செவ்வாய்க்கிழமை கைதான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோர் நள்ளிரவில் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே இந்த வழக்கில் நிலம் தொடர்பான ஆவணங்கள் தொலைத்து விட்டதாகக் கூறிய சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை சிபிசிஐடி போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.

இதையடுத்து காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக புதன்கிழமை காலை கரூர் திண்ணப்பா நகரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், காவல் ஆய்வாளர் பிருதிவிராஜுக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விடுக்கப்பட்டுள்ளது. பிருதிவிராஜை சேலம் மத்திய சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் கரூர் நகர காவல் நிலையத்தில் அதிமுக ஆட்சியில் நகர காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் என்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT