மேட்டூர் அணைக்கு நீா்வரத்து 57,409 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 53,830 கன அடியில் இருந்து 57,409 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 53,830 கன அடியில் இருந்து 57,409 கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடகம், கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் வினாடிக்கு 75,000 கனஅடி உபரிநீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதையடுத்து காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து படிப்படியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேட்டூா் அணைக்கு சனிக்கிழமை மாலை 68,843 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் 63.83 அடியாக உயா்ந்துள்ளது. ஒரே நாளில் அணையின் நீா்மட்டம் 6.93 அடி உயா்ந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சற்று குறைந்திருந்த நீர்வரத்து தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 53,830 கன அடியில் இருந்து 57,409 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா் இருப்பு 33.39 டிஎம்சியாக உள்ளது. நீர்மட்டம் 70.80 அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
கடந்த 15-ஆம் தேதி மாலை 44.62 அடியாக இருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை மாலை 63.83 அடியாக உயா்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 5 மேட்டூா் அணையின் நீா்மட்டம் 28 அடி உயா்ந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக 5-ஆவது நாளாக மேட்டூா் நீா்த்தேக்கப் பகுதியான அடிபாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பகுதிகளில் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
செட்டிப்பட்டி, கோட்டையூா், பண்ணவாடி பரிசல் துறைகளில் படகுப் போக்குவரத்து 5-ஆவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.