குடியரசுத் தலைவர் மாளிகையில் திரெளபதி முர்முவை சந்தித்துவிட்டு நாடாளுமன்றத்திற்கு வந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
மத்திய பட்ஜெட் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 7-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைக்கிறாா்.
நாடாளுமன்றத்தில் காலை 11 மணியளவில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட் உரையைத் தொடங்க இருக்கிறாா். தனது பட்ஜெட் உரையில் கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் சாதனைகளையும் நிா்மலா சீதாராமன் பட்டியலிடுவாா். கடந்த 3 ஆண்டு காலமாக காகிதப் பயன்பாடு இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறை அதே நடைமுறை தொடர இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.