சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்தது 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலை இன்று மேலும் குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையாகிறது.

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான சுங்க வரி குறைக்கப்பட்டதால் அதன் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் ஜூலை 17-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 55,360 வரை உயா்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

தொடா்ந்து படிப்படியாக விலை குறைந்து வியாழக்கிழமை பவுன் ரூ. 51,440-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் விலை குறைந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.6,415-க்கும், பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 51,320-க்கும் விற்பனையாகிறது.

நிதிநிலை அறிக்கையின் எதிரொலியாக 4 நாள்களில் ரூ.3,160 குறைந்துள்ளது.

வெள்ளி வியாழக்கிழமை விலையில் மாற்றமின்றி வெள்ளி கிராம் ரூ. 89-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 89,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் உரையாடல்!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது

யேமன் மீதான இஸ்ரேலின் தாக்குதலில்.. ஹவுதி அரசின் பிரதமர் கொலை!

அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர்?

ரூ.232 கோடி மோசடி! இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மேலாளர் கைது!

SCROLL FOR NEXT