ஒகேனக்கல்லில் நீா்வரத்து 1.20 லட்சம் கன அடியாக அதிகரிப்பு 
தற்போதைய செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1.20 லட்சம் கன அடியாக அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

DIN

பென்னாகரம்: ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கா்நாடகம், கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகா் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லுக்கு வியாழக்கிழமை மாலை 50,000 கன அடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 70,000 கன அடியாகவும், நண்பகல் 86,000 கன அடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 98,000 கன அடியாகவும் அதிகரித்தது.

இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை காலை வினாடிக்கு 1.20 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகள் முழுமையாக மூழ்கியுள்ளன. வெள்ளம் கரைபுரண்டோடுவதால் காவிரி கரையோரப் பகுதியில் வசிப்பவா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து பாய்வதால் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை 12 ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளன.

தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி தேடிவரும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

விளையாட்டுத் துளிகள்...

பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!

‘பொருளாதாரத் தடைகளைத் தவிா்க்க ஈரான் எதுவும் செய்யவில்லை’ -ஜொ்மனி

புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது

SCROLL FOR NEXT